பாரத சாரண சாரணியர் இயக்க பயிற்சி முகாம்

பாரத சாரண சாரணியர் இயக்க பயிற்சி முகாம்
X
பாரத சாரண சாரணியர் இயக்க பயிற்சி முகாம் நடைபெற்றது.
அரியலூர் பிப்.20- தமிழ்நாடு பாரத சாரண சாரணிய இயக்கம் உடையார்பாளையம் சாரண மாவட்டத்தின் சார்பாக அணித் தலைவர் பயிற்சி முகாம் 18 ம்தேதி 19 ம்தேதி ஆகிய இரண்டு நாட்கள் மகிமைபுரம் பி. எம். பப்ளிக் பள்ளியில் நடைபெற்றது.இம் முகாமினை பள்ளியின் முதல்வர் அருளா குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். முகாமில் உடையார்பாளையம் சாரணர் மாவட்டத்தின் பயிற்சி ஆணையர் சுவாமிநாதன் , சாரணர் இயக்க மாவட்ட செயலாளர் பாண்டியன் , தலமையிடத்து சாரண ஆணையர் முத்தமிழ்செல்வன் , மாவட்ட அமைப்பு ஆணையர் முரளிதரன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சாரண இயக்க வரலாறு , சாரண உறுதிமொழி ,சாரண விதி , சாரண குறிக்கோள் , முதலுதவி , கயிற்று கலை , கூடாரம் அமைத்தல் , பாடல்கள் , உடற்பயிற்சி, யோகா போன்ற பல்வேறு தலைப்புகளில் பயிற்சி அளித்தனர். முகாமின் நிறைவு விழாவிற்கு உடையார்பாளையம் சாரண மாவட்ட தலைவரும் எம் ஆர் கல்வி நிறுவன தாளாளரும்மான எம் ஆர் ரகுநாதன் தலைமை வகித்து சிறப்புரையாற்றினார்.மாடர்ன் கல்வி குழுமத்தின் துணைத் தலைவர். சுரேஷ் வாழ்த்தி பேசினார். பள்ளியின் முதல்வர் அருளா பயிற்சி ஆணையர் சுவாமிநாதன் தலைமையிடத்து ஆணையர் முத்தமிழ் செல்வன் , ஆகியோர் முன்னிலை வகித்தனர்.விழாவின் தலைவர்கள் சிறப்புரையாற்றும் போது மாணவ மாணவிகளுக்கு சாரணை இயக்கம் மிகவும் அவசியமானது என்றும் , சாரண மாணவர்கள் உண்மையானவராகவும் நம்பிக்கை உடையவராகவும் தேச பற்று உடையவராகவும் இருப்பார்கள் எனவும் சமுதாயம் சிறப்பாக செயல்பட அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் நல் ஒழுக்கத்துடன் விளங்கிட அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் சாரண இயக்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டு நாட்டிற்கு சிறந்த நல்ல குடிமகனாக விளங்க வேண்டும் என சிறப்புரையாற்றினர் . முன்னதாக சாரண செயலாளர் பாண்டியன் வரவேற்புரையாற்றினார், அமைப்பு ஆனையார் முரளிதரன் நன்றி கூறினார்.முகாமில் ஜெயங்கொண்டம் மற்றும் T. பழூர் ஒன்றியத்தைச் சேர்ந்த அரசு பள்ளிகள் , அரசு உதவி பள்ளிகள் , தனியார் பள்ளிகள் , மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் என்ன மொத்தம் 18 பள்ளிகளைச் சேர்ந்த 223 சாரணர்கள் மற்றும் 112 சாரணியர்கள் என மொத்தம் 335 சாரண சாரணியர்கள் கலந்து கொண்டனர். முகாமிற்கான ஏற்பாடுகளை பள்ளியில் உடற்கல்வி ஆசிரியர் பிரேம் மற்றும் சாரணிய ஆசிரியைகள் அகிலா தேவதர்ஷினி , காவிய தர்ஷினி , விமலா ஜாய்ஸ் , ராஜேஸ்வரி ,சாந்தி , ராக சுதா ஆகியோர் செய்திருந்தனர்.
Next Story