மாவட்ட ஆட்சியரை கண்டித்து வருவாய்த் துறையினர் போராட்டத்தினால் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நெல் விவசாயிகள் பாதிப்பு

X
மாவட்ட ஆட்சியரை கண்டித்து வருவாய்த் துறையினர் போராட்டத்தினால் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நெல் விவசாயிகள் பாதிப்பு., விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் பிரதான தொழிலாக நெல் விவசாயம் சுமார் 2000 ஏக்கருக்கு மேல் நடைபெற்று வருகிறது. அரசு நேரடியாக நெல்களை கொள்முதல் செய்வதற்கு வத்திராயிருப்பு, சுந்தரபாண்டியம் தம்பிபட்டி,கான்சாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நான்கு இடங்களில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது அறுவடை முடிந்து நெற்கதிர்களை தம்பிபட்டி அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு விவசாயிகள் கொண்டு சென்றால் அதிகாரிகள் வாங்க மறுப்பதாகவும், தற்போது விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலனை கண்டித்து வருவாய்த் துறையினர் தொடர் போராட்டங்கள் நடத்தி வருவதால் பயிர் அடங்கல் விவசாயிகளுக்கு கிடைப்பதில்லை எனவும் பயிர் அடங்கள் இருந்தால் மட்டுமே நெல்களை வாங்க முடியும் என அரசு அதிகாரிகள் தெரிவிப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.நீண்ட நாட்களாக அறுவடையான நெற்களை மலை போல் குவித்து வைத்துள்ளனர். நெற்களை பூச்சிகள் அறித்து சேதமாகிறது எனவும் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். ஸ்டாலின் அரசு உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்கும் வருவாய்த் துறையினருக்கும் இடையே உள்ள பிரச்சனைகளை தீர்த்து வைத்து பயிர் அடங்கள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். பேட்டி : முகமது உஷேன் (விவசாயி தம்பிபட்டி)
Next Story

