தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு கால பைரவருக்கு சிறப்பு பூஜை.

X
Paramathi Velur King 24x7 |20 Feb 2025 9:27 PM ISTபரமத்தி வேலூர் சிவன் கோயில்களில் கோவிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு கால பைரவருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
பரமத்தி வேலூர், பிப். 20: பரமத்தி வேலூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கோயிலில் கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. பாண்டமங்கலம் அரசாய் அம்மன் கோவிலில் அமைந்துள்ள ஸ்ரீ காலபைரவர், புதிய காசி விசுவநாதர் கோவில் காலபைரவர், நன்செய் இடையா திருவாலீஸ்வரர் கோவில் காலபைரவர், மாவு ரொட்டி பீமேஸ்வரர் கோவில் கால பைரவர் கோயில்களில் தேய்பிறை அஷ்டமி பூஜை நடைபெற்றது. முன்னதாக சாமிக்கு பால்,நெய்,மஞ்சள்,திருமஞ்சல் மற்றும் திருநீறு உள்ளிட்ட வாசனை திரவியங்களில் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் வண்ண மலர்கள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு பைரவருக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.
Next Story
