பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்

பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்
X
அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் ,ஒன்றிய கழக செயலாளர்கள் பகுதி கழக செயலாளர்களுடான பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
அதிமுக ஈரோடு மாநகர் மாவட்ட கழக அலுவலகமான இதய தெய்வம் அம்மா மாளிகையில் மாவட்ட பொறுப்பாளர்கள் ,ஒன்றிய கழக செயலாளர்கள் பகுதி கழக செயலாளர்களுடான பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சரும் மாநகர் மாவட்ட கழக செயலாளருமான கே.வி.ராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது.இதில் சிறப்பு அழைப்பாளராக பூத் கமிட்டி மாவட்ட பொறுப்பாளரும் முன்னாள் அமைச்சரும் கழக அமைப்பு செயலாளருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்.ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பி.சி.ராமசாமி ,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கே.எஸ்.தென்னரசு, வி.பி.சிவசுப்பிரமணி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வகுமார சின்னையன், முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம், முன்னாள் துணை மேயர் கே.சி.பழனிச்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட பூத்கமிட்டி பொறுப்பாளரும் முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசுகையில் கழக பொதுச்செயலாளர் அவர்கள் கூறியதன் அடிப்படையில் இந்த ஆலோசனை கூட்டமானது நடைபெற்று வருகிறது. இதில் பூத் கமிட்டியை சரியாக அமைக்க வேண்டும் என்றும் அப்படி அமைத்தால் வெற்றி எளிது என்றும் பேசினார். மேலும் பேசிய அவர் வருகிற சட்டமன்ற தேர்தலில் கழக பொதுச்செயலாளர் தலைமையில் மகத்தான கூட்டணி அமையும் என்றும் திமுக ஆட்சியின் அலங்கோலங்கள் மக்கள் இடத்தில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.அதனை நாம் மக்கள் இடத்தில் எடுத்துச் சொல்ல வேண்டும் .வருகிற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைய வேண்டும் என மக்கள் தெளிவாக இருந்து கொண்டு உள்ளனர்.வரக்கூடிய தேர்தலில் ஈரோடு மாநகர் மாவட்டம் முதன்மை மாவட்டம் என்ற பெருமையை நாம் அனைவரும் தேடி தர அனைவரும் ஒற்றுமையுடன் பாடுபட வேண்டும் என்றும் பேசினார்...
Next Story