முறைகேட்டில் ஈடுபடும் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் மற்றும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை

முறைகேட்டில் ஈடுபடும் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் மற்றும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
முறைகேட்டில் ஈடுபடும் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் மற்றும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியை அடுத்த மேல்முதலம்பேடு கிராமத்தில் உள்ள கங்கப்பன் என்பவருக்கு சொந்தமான சர்வே எண் 153 ல் 1.07 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இதனை சுப்பிரமணி, தயாளன், சாமிநாதன் ஆகியோர் பெயரில் பாக பிரிவினை செய்ய வேண்டும். இதற்காக 2024 மார்ச் மாதம் ஜமாபந்தியில் மனு கொடுத்துள்ளனர். எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பிரச்சினைக்கு தீர்வும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் மேல்முதலம்பேடு கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் ஏ.ரவி, தயாளன், ஏழுமலை ஆகியோர் கும்மிடிப்பூண்டி வட்டாச்சியர் சரவணகுமாரியை வட்டாச்சியர் அலுவலகத்தில் நேரடியாக சந்தித்துள்ளார். பாகப்பிரிவினைக்காக ஜமாபந்தியில் மனு கொடுத்தோம், எந்த நடவடிக்கையும் இல்லை. எங்கள் குடும்பத்திற்கு உரிமையான சொத்தை சகோதரர்கள் பெயரில் பாக பிரிவினை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர். அப்போது ஒரு பாக பிரிவுக்கு ரூ.20 ஆயிரம் வீதம், மூன்று நபர்கள் பெயரில் பிரிக்க வேண்டும் என்றால் ரூ.60 ஆயிரம் கொடுக்க வேண்டும். யாராக இருந்தாலும் பணம் கொடுத்தால் தான் வேலை நடக்கும் என வட்டாட்சியர் கூறியுள்ளதாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் தெரிவிக்கின்றனர். வேறு வழியில்லாமல் தலைமை நில அளவையிரிடம் அன்றைய தினமே ரொக்கமாக ரூ. 40 ஆயிரம் கொடுத்துள்ளதாக கூறுகின்றனர். மேலும் முழு பணத்தையும் செலுத்தினால் தான் பாக பிரிவினை உத்தரவு நகலில் கையொப்பம் இட முடியும் என வட்டாட்சியர் வலியுறுத்தியுள்ளதாக தெரிகிறது. இந்த சூழலில் 31-7-2024 அன்று தலைமை நில அளவையர் (H.S), வங்கி கணக்கில் (கூகுள் ப்ளே),, ரூ.20 ஆயிரம் செலுத்தியுள்ளனர். அதன் பிறகு தலைமை நில அளவையர் முன்னிலையில் வட்டாட்சியர் கையொப்பமிட்டுள்ளார். பின்னர் 3 நாட்களில் பட்டா வழங்கப்படும் என வட்டாட்சியர் தெரிவித்துள்ளார். அதன் பிறகும் பட்டா கொடுக்காமல் ஒரு மாத காலமாக அலைகழித்துள்ளனர். கிராம நிர்வாக அலுவலரிடம் சென்றால் நீ என்னை பார்க்காமல் நேரடியாக வட்டாட்சியரை சந்தித்தால், பட்டா எப்படி வாங்கி விடுகிறாய் என்று பார்க்கலாம். நான் ஆன்லைனில் லாகிங் எடுத்தால் தான் பட்டா வழங்க முடியும் என கிராம நிர்வாக அலுவலர் ஏளனமாக பேசியதாக விவசாயிகள் கூறுகின்றனர். வழங்கியுள்ள பட்டாக்களை எப்படி கொடுத்துள்ளனர் என விசாரணை செய்து லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்துகின்றனர்.
Next Story