உணவு கொடுக்க தாமதம் : மனைவியை கழுத்தறுத்துக் கொன்ற மாற்றுத்திறனாளி கணவர்

உணவு கொடுக்க தாமதம் : மனைவியை கழுத்தறுத்துக் கொன்ற மாற்றுத்திறனாளி கணவர்
X
இரவு உணவை வழங்க தாமதமானதால் ஆத்திரத்தில் மனைவியை கழுத்தறுத்துக் கொன்ற மாற்றுத்திறனாளி கணவர்
இரவு உணவை வழங்க தாமதமானதால். ஆத்திரத்தில் மனைவியை கழுத்தறுத்திக் கொன்ற மாற்றுத்திறனாளி கணவர் மனைவியை கொலை செய்து விட்டு தற்கொலைக்கு முயன்ற கணவன் அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி மகன் கொடுத்த புகாரின் பேரில் ஆவடி திருமுல்லைவாயில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர் திருமுல்லைவாயில் கமலம் நகர் 3வது தெருவை சேர்ந்த விநாயகம் வ/72 தனலட்சுமி வ/60 பிரபல பிரிட்டானியா பிஸ்கட் கம்பெனியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர் தங்க கணபதி வ/34, மணிகண்டன் வ/‌32 என்பவர்களுடன் வசித்து வருவதாகவும்.நேற்று இரவு 10 மணியளவில் ஐடி கம்பெனி வேலை முடித்து வந்த மூத்த மகன் தங்ககணபதி வீட்டிற்க்கு வந்து பார்க்கும்போது. தனது தாயார் ஹாலில் உள்ள பெட்டில் கழுத்தில் அறுபட்டு ரத்த காயத்துடன் இறந்த நிலையில் உள்ளதை பார்த்து உடனடியாக திருமுல்லைவாயில் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ஆவடி காவல் உதவி ஆணையர் கனகராஜ் சட்டம் ஒழுங்கு ஆய்வாளர்கள் மில்லர், மற்றும் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட தனிப்படை போலீசார். தீவிர விசாரணை மேற்கொண்டனர். கணவர் விநாயகம் சுமார் 09:30மணியவில். இரவு உணவு கேட்டதற்கு மனைவி தனலட்சுமி தாமதமாக கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் வாக்குவாதம் ஏற்பட்டு சண்டை முற்றியதில் விநாயகம் மனைவி தனலட்சுமி கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தானும் தற்கொலைக்கு முயற்சி செய்த நிலையில். கழுத்தில் 2 தையல் போடப்பட்டு அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குற்றவாளி விநாயகம் ஒரு கால் இழந்த மாற்றுத்திறனாளி எனவும். நடந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள திருமுல்லைவாயில் காவல் துறையினர் விநாயகத்தை விசாரணைக்கு பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. உணவு வழங்காத காரணத்திற்காக கணவனே மனைவியை கொலை செய்தது திருமுல்லைவாயில் கமலம் நகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story