கல்லூரியில் படித்த மாணவிகள் தங்கள் செலுத்திய கல்வி கட்டணத்தை பெற்று தரக்கூறி ஆட்சியரிடம் மனு அளித்தனர்*

கல்லூரியில் படித்த மாணவிகள் தங்கள் செலுத்திய கல்வி கட்டணத்தை பெற்று தரக்கூறி  ஆட்சியரிடம் மனு அளித்தனர்*
X
கல்லூரியில் படித்த மாணவிகள் தங்கள் செலுத்திய கல்வி கட்டணத்தை பெற்று தரக்கூறி ஆட்சியரிடம் மனு அளித்தனர்*
* ராமசாமிபுரத்தில் இயங்கி வந்த தனியார் நர்சிங் கல்லூரிக்கு உரிமம் இல்லை என்பது கண்டறியப்பட்ட நிலையில் அந்த கல்லூரியில் படித்த மாணவிகள் தங்கள் செலுத்திய கல்வி கட்டணத்தை பெற்று தரக்கூறி ஆட்சியரிடம் மனு அளித்தனர்* விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே இராமசாமிபுரத்தில் செயல்பட்டு வந்த தமிழ்நாடு பெண்கள் கல்லூரி என்ற தனியார் நர்சிங் கல்லூரியில் சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவிகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து படித்து வந்தனர் இந்த நிலையில் அந்த கல்லூரிக்கு முறையான அங்கீகாரம் இல்லை என கடந்த சில நாட்களாக அந்த கல்லூரியில் படிக்கும் மாணவிகள் குற்றம் சாட்டி பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர் இதை அடுத்து அரசுத்துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில் அந்த கல்லூரிக்கு முறையான உரிமம் இல்லை என்பது கண்டறியப்பட்டது. இதை அடுத்து அந்த கல்லூரியின் தாளாளர் கைது செய்யப்பட்டார் மேலும் அந்த கல்லூரியில் படித்த மாணவிகளுக்கு அசல் சான்றிதழ் திரும்ப ஒப்படைக்கப்பட்டது இதை அடுத்து இன்று அந்த கல்லூரியில் படித்த மாணவிகள் செலுத்திய கல்வி கட்டணம் திரும்ப வழங்கப்படும் என கூறப்பட்டிருந்தது கட்டணத்தை பெற மாணவிகள் அங்கு வந்ததை அடுத்து கல்வி கட்டணம் திரும்ப வழங்கப்படவில்லை இதனால் ஆத்திரமடைந்த மாணவிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் அதை தொடர்ந்து அங்கு பேச்சுவார்த்தை நடத்திய காவல்துறையினர் அவர்களை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மாவட்ட ஆட்சியர் சந்தித்து மனு அளிக்க அனுப்பி வைத்தனர் இதை தொடர்ந்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த மாணவிகள் தாங்கள் செலுத்திய கல்வி கட்டணத்தை இன்று வழங்குவதாக தனியார் நர்சிங் கல்லூரி நிர்வாகத்தினர் கூறியிருந்ததாகவும் தற்போது இன்று பணம் வழங்கவில்லை எனவும் தங்கள் பணத்தைப் பெற்றுத் தர வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஜெயசீலனிடம் மனு அளித்து சென்றனர் மேலும் மாணவியின் பெற்றோர் கூறுகையில்... தங்கள் குழந்தை படித்த நசியன் கல்லூரியில் செலுத்திய கல்வி கட்டணத்தை திரும்ப தர வேண்டும் என்றும் தனது குழந்தைக்கு முறையான அங்கீகாரம் பெற்ற கல்லூரியில் படிப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும் என கோரியும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்ததாக கூறினார்.
Next Story