குவாரி குத்தகை உரிமம் கோரும் விண்ணப்பங்களை இணையதள வாயிலாக விண்ணப்பிக்கலாம்

X
விருதுநகர் மாவட்டத்தில் தமிழ்நாடு சிறுகனிம சலுகை விதிகள் 1959-ன்படி சாதாரண கற்கள், மண், கிராவல், கிரானைட் போன்ற சிறுவகை கனிமங்கள் மற்றும் 31 வகையான சிறுகனிமங்களுக்கான குவாரி குத்தகை உரிமம் கோரும் விண்ணப்பங்கள், மற்றும் சுண்ணாம்புக்கல் போன்ற பெரு கனிம குவாரிகளுக்கான விண்ணப்பங்கள் மற்றும் செங்கல் சூளை பதிவு சான்று பெறுவற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 24.02.2024 தேதி முதல் மின்னணு முறையில் இணையதள வாயிலாக மட்டுமே பெறப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. மேற்கண்ட சிறுகனிமங்களுக்கான குவாரி குத்தகை உரிமம் கோர விண்ணப்பிக்கும் நபர்கள் www.mimas.tn.gov.in என்ற இணையதளத்தில் வாயிலாக உரிய படிவத்தில் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
Next Story

