போதைப் பொருள் ஒழிப்போம் என உறுதிமொழி.

போதைப் பொருள் ஒழிப்போம் என உறுதிமொழி.
X
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ மாணவியர் போதை பொருட்களை ஒழிப்போம் என உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்..
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் போதைப் பொருட்கள் பயன்பாடு மற்றும் கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழியை மாவட்ட ஆட்சியர் தலைமையில் கல்லூரி மாணவ மாணவியர் ஏற்றுக்கொண்டனர். இந்நிகழ்வில் 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் கலந்து கொண்டு போதைப் பொருளுக்கு எதிரான போதைப் பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உறுதிமொழியற்றனர். இந்த நிகழ்வில் மன்னார்குடி ராஜகோபால சுவாமி அரசு கலை அறிவியல் கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் மற்றும் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பிரதீப், துணை ஆட்சியர் (கலால்) சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
Next Story