கலைஞர் கனவு இல்ல திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

X
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தமிழ்நாடு முதலமைச்சரின் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் மன்னார்குடி பகுதியில் முகாமிட்டு கள ஆய்வினை மேற்கொண்டார். திருவாரூர் மாவட்டத்தில் 2025 பிப்ரவரி மாதத்திற்கான முகாம் மன்னார்குடி வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்றது இம் முகாமில் மாவட்ட ஆட்சியர் மன்னார்குடி வட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் முகாமிட்டு உங்களைத் தேடி உங்கள் ஊரில் முகாமிற்கு மன்னார்குடி வட்டத்தில் உள்ள நெடுவாக்கோட்டை ஊராட்சியில் கீழனாகை கிராமத்தில் 34 8 லட்சம் மதிப்பீட்டில் கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் பயனாளிகளால் கட்டப்பட்டு வரும் குடியிருப்பு வீடுகளை மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Next Story

