பள்ளி மாணவர்களின் வாசிப்பு திறனை அறிந்து கொண்ட ஆட்சியர்..

பள்ளி மாணவர்களின் வாசிப்பு திறனை அறிந்து கொண்ட ஆட்சியர்..
X
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியில் முதல்வரின் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மன்னார்குடி வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் முகாம்மிட்டுஆய்வு செய்து வருகிறார் அதன் ஒரு பகுதியாக பள்ளி மாணவர்களின் வாசிப்பு திறன் குறித்து அறிந்து கொண்டார்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தமிழ்நாடு முதலமைச்சரின் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் மன்னார்குடி பகுதியில் முகாமிட்டு கள ஆய்வினை மேற்கொண்டார். கீழத்திருப்பாலக்குடி ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்டுள்ள சமையல் கூடம் மற்றும் கழிவறை கட்டிடங்களை பார்வையிட்டு பள்ளி மாணவ, மாணவியரிடம் கல்வித்தரம் குறித்து தெரிந்து கொள்ளும் விதமாக பள்ளி மாணவ மாணவிகளை பாடப் புத்தகங்களை படித்துக் காட்டுமாறு மாவட்ட ஆட்சியர் கூறியதன் அடிப்படையில் பள்ளி மாணவ, மாணவியர் மாவட்ட ஆட்சியரிடம் ஆர்வத்துடன் புத்தகங்களை வாசித்து காண்பித்தனர்..
Next Story