கிராம மக்கள் பீதி

கிராம மக்கள் பீதி
X
தாளவாடி அருகே மாட்டு கொட்டகைக்குள் புகுந்து கன்று குட்டியை கொன்ற சிறுத்தையால் பரபரப்பு கிராம மக்கள் பீதி
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இதில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.தாளவாடி வனச்சரகத்தில் உட்பட்ட வனப்பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தை, மற்றும் புலிகள் அவ்வபோது விவசாய தோட்டத்துக்குள் புகுந்து ஆடு, மாடு ,காவல் நாய்களை வேட்டையாடுவது தொடர்கதையாகி வருகிறது.இந்நிலையில் கேர்மாளம் வனச்சரகத்துக்கு உட்பட்ட காணக்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தன் (45).விவசாயி. இவர் ஆடு, மாடு வளர்த்து வருகிறார் .வழக்கம் போல வீட்டின் அருகே உள்ள மாட்டு கொட்டையில் ஆடு மற்றும் மாடுகளை கட்டிச் சென்று விட்டு தூங்கச் சென்று விட்டார். இன்று காலையில் எழுந்து பார்த்தபோது மாட்டு கொட்டையில் இருந்த கன்று குட்டி ஒன்று கடிபட்டு இறந்து கிடந்தது.இதுபற்றிய உடனடியாக கேர்மாளம் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர் .சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர் இறந்த கன்று குட்டியை ஆய்வு செய்தனர். ஆய்வு செய்த போது வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை ஒன்று கன்று குட்டியை கடித்துக் கொன்றது தெரிய வந்தது. மாட்டுக்கொட்டைகைக்குள் புகுந்து கன்று குட்டியை சிறுத்தை கடித்துக் கொன்ற சம்பவம் காணக்கரை கிராம மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. வனத்துறையினர் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, எங்கள் கிராமம் வனப்பகுதியை ஒட்டி உள்ளது. இங்கு பெரும்பாலும் விவசாய தொழிலை சார்ந்து உள்ளனர். இதற்காக கால்நடைகளை அதிகளவில் வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு வனப்பகுதி விட்டு வெளியேறிய சிறுத்தை எங்கள் கிராமத்துக்குள் புகுந்து கன்று குட்டியை கடித்துக் கொன்று உள்ளது. இதனால் கிராம மக்கள் பீதியில் உள்ளோம். சிறுத்தை மீண்டும் எந்நேரமும் கிராமத்திற்குள் வரலாம். எனவே வனத்துறையினர் அட்டகாசம் செய்யும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்றனர்.
Next Story