திருக்கோவிலுார் கல்லுாரியில் மாணவர்கள் ரத்த தானம்

X
திருக்கோவிலுார் கலை அறிவியல் கல்லுாரி, உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனை, குன்னத்துார் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் ரத்ததான முகாம் நடந்தது. கல்லுாரி வளாகத்தில் நடந்த முகாமில் கல்லுாரி முதல்வர் நாராயணசாமி வரவேற்றார். கல்லுாரி தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கி, முகாமை துவக்கி வைத்தார். செயலாளர் ஏழுமலை, பொருளாளர் சுப்ரமணியன், தாளாளர் பழனிராஜ், துணைத் தலைவர் முஸ்டாக் அகமது, நிர்வாக அலுவலர் குமார் முன்னிலை வகித்தனர். நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள், லியோ சங்கத்தினர் உள்ளிட்ட கல்லுாரி மாணவர்கள், 53 யூனிட் ரத்தம் வழங்கினர்.
Next Story

