திமுக சார்பில் இந்தி திணிப்பை எதிர்த்து விளம்பர பலகை

X
ஒன்றிய அரசே மோடி அரசே இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம் மும்மொழி கொள்கையை என்றும் எதிர்ப்போம் என நகர முழுவதும் திமுக சார்பில் எதிர்ப்பு விளம்பர பலகை செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் நகர் முழுவதும் கடை மட்டும் பொது இடங்களில் மதுராந்தகம் திமுக நகர கழக செயலாளர் குமார் தலைமையில் மதுராந்தகம் நகரம் முழுவதும் மோடி ஒன்றிய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒன்றிய அரசே மோடி அரசே இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம் மும்மொழிக் கொள்கையின் என்றும் எதிர்ப்போம் என வாசகம் பொருந்திய - விளம்பர பலகையை பொருத்தி ஒன்றிய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். ஒரு நாளும் இந்தியை ஏற்க மாட்டோம் என்றும் எதிர்ப்போம் மும்மொழிக் கொள்கையை ஒரு காலமும் ஏற்க மாட்டோம் தமிழ்நாட்டுக்கு கொடுக்க வேண்டிய கல்வி நிதியை உடனே வழங்கு என்கின்ற கோஷமிட்டு நகர் முழுவதும் இந்த விளம்பர பலகை வைக்கப்பட்டது. இதில் நகர மன்ற தலைவர் மலர்விழி குமார் மற்றும் கழக பொறுப்பாளர்கள் தொண்டர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story

