ஆபத்தை உணராமல் காட்டு யானையை வீடியோ எடுத்துச் செல்லும் வாகன ஓட்டி குவியும் கண்டனங்கள்

ஆபத்தை உணராமல் காட்டு யானையை வீடியோ எடுத்துச் செல்லும் வாகன ஓட்டி குவியும் கண்டனங்கள்
X
உடுமலை மூணார் சாலையில் ஆபத்தை உணராமல் காட்டு யானையை வீடியோ எடுத்துச் செல்லும் வாகன ஓட்டி குவியும் கண்டனங்கள்
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ளது ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட உடுமலை அமராவதி வனபகுதி இங்கு யானை சிறுத்தை உள்ளிட எராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன இந்நிலையில் இந்த வனபகுதி வழியே செல்லும் உடுமலை மூனாறு சாலையில் யானை ஒன்று ஒய்யாராமாய் நடந்துவந்துகொண்டிருக்க அவ்வழியே காரில் வந்த ஒரு சிலர் அதனை ஆபத்தை உனராமல் வீடியோவாக செல்போனில் படம்பிடித்தனர் காரில் இருந்தவர்கள் வண்டியை நிறுத்து நிறுத்து என்றும் அது ஒன்றும் செய்யாது எனவும் சிறிதும் ஆபத்தை உணராமல் வீடியோ எடுத்தவாறு சென்றுள்ளனர் உனக்கு ஆயுசு கெட்டி மாப்பிள்ளை என்று வடிவேல் கூறும் டயலாக்கை போல அந்த யானையும் அவர்களை எதுவும் செய்யாமல் சுற்றுலா பயணிகளை பின்தொடர்ந்தவாறு அண்ணனடை போட்டுக் கொண்டே காட்டுக்குள் சென்றது இதே வீடியோ எடுத்த அந்த வாகன ஓட்டி சமூக வலைதளங்களில் பகிர அது வைரலாக பரவி வருகிறது மேலும் ஆபத்தை உனராமல் மிக குறுகிய தூரத்தில் யானை படம்பிடித்து வந்தது குறித்தும் வனவிலங்குகளுக்கு இடையூறு செய்வது குறித்தும் கமெண்ட் செக்ஸனில் ஏராளமான கண்டனங்களும் குவிந்து வருகிறது
Next Story