சின்ன ஓங்காளியம்மன் கோவில் குண்டம் திருவிழாவின் தொடக்கமாக முகூர்த்தக்கால் நடும் விழா

சின்ன ஓங்காளியம்மன் கோவில் குண்டம் திருவிழாவின் தொடக்கமாக முகூர்த்தக்கால் நடும் விழா
X
சின்ன ஓங்காளியம்மன் கோவில் குண்டம் திருவிழாவின் தொடக்கமாக முகூர்த்தக்கால் நடும் விழா
திருச்செங்கோடு அருள்மிகு சின்ன ஓங்காளியம்மன் கோவில் மாசி குண்டம் திருவிழா பூச்சாட்டுதளுடன் தொடங்கியது ஓங்காளியம்மன் கோவில் வளாகத்தில் முகூர்த்த கால் நடப்பட்டு திருவிழா முறைப்படி துவக்கி வைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் திருச்செங்கோடு நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு நகர் மன்ற உறுப்பினர்கள் பரம்பரை அறங்காவலர் சாந்தி முத்துக்குமார் ஆகியோர் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர் முன்னதாக முகூர்த்த காலுக்கு பூஜைகள் செய்யப் பட்டு பால், நவதானியங்கள் கோவிலை சுற்றி வலம் வந்து கோவிலின் முன்பக்கத்தில் கால் ஊன்றப் பட்டது.தொடர்ந்து இரவு அம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடத்தப்பட்டு பூச்சாற்றுதல் காப்பு கட்டு நடைபெற உள்ளது. தொடர்ந்துவரும் ஆறாம் தேதிஅம்மன் அழைத்தல் சக்தி கரகம் ஏழாம் தேதி விளக்கு பூஜை அக்னி கரகம் அழகு குத்துதல் ஒன்பதாம் தேதி சங்காபிஷேகம் பத்தாம் தேதி பூச்சொரிதல் விழா எதனைத் தொடர்ந்து 11ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மகா குண்டம் பெருவிழா நடக்க உள்ளது வரும் 12ஆம் தேதி பொங்கல் விழாவும் 15ஆம் தேதி அம்பாள் நான்காவது வீதிகளில் தெருவிதி உலாவுடன் நிகழ்ச்சி நிறைவடைய உள்ளது இந்த குண்டம் திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு குண்டம் இறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story