இந்த ஆண்டு  நடைபெற உள்ள மலர் கண்காட்சிக்காக அரசு தாவரவியல் பூங்காவில் விதைப்பு பணிகள் தீவிரம்...

இந்த ஆண்டு  நடைபெற உள்ள மலர் கண்காட்சிக்காக அரசு தாவரவியல் பூங்காவில் விதைப்பு பணிகள் தீவிரம்...
இந்த ஆண்டு  நடைபெற உள்ள மலர் கண்காட்சிக்காக அரசு தாவரவியல் பூங்காவில் விதைப்பு பணிகள் தீவிரம்... ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் பிரசித்திபெற்ற மலர் கண்காட்சி நடைபெறும். அவ்வாறு நடைபெறும் மலர் கண்காட்சியை காண வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களை சேர்ந்த லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இந்நிலையில் சுற்றுலா பயணிகளை கவர பூங்கா நிர்வாத்தின் மூலம் பல வகையான வண்ண மலர்கள் காட்சிக்கு பல வடிவங்களில் வைக்கப்படும். இந்த ஆண்டு  நடைபெற உள்ள மலர் கண்காட்சிக்காக அரசு தாவரவியல் பூங்காவில் விதைப்பு பணிகள் துவக்கப்பட்டுள்ளது. தற்போது மேரிகோல்டு, சால்வியா, பெட்டூனியம், டெல்பீனியம் ஆகிய செடிகளின்  விதைப்பு பணிகள் துவக்கப்பட்டுள்ளன. நாற்று உற்பத்தி முடிந்தவுடன், நடவு பணிகள் படிப்படியாக துவங்கப்பட உள்ளதாக பூங்கா நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story