பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அரசு பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அரசு பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது
X
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அரசு பள்ளி ஆசிரியர் கைது
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள திருவேங்கடம் அரசு மேல்நிலைப்பள்ளியில் கணினி ஆசிரியர் டேவிட் மைக்கேல், பள்ளியில் பயிலும் 3 மாணவிகளுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்ததாக அந்த மாணவிகள் பள்ளி ஆசிரியையிடம் கூறியுள்ளனர் இச்சம்பவம் குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் விசாரணை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து ஆசிரியர் டேவிட் மைக்கேல் மருத்துவ விடுப்பில் சென்று தலை மறைவானதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து பள்ளி ஆசிரியை மாணவிகளுக்கு ஆசிரியர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக ஆசிரியர் டேவிட் மைக்கேல் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் அடிப்படையில் தனிப்படை அமைக்கப்பட்டு ஆசிரியர் டேவிட் மைக்கேலை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்த நிலையில் கன்னியாகுமரி-யில் பதுங்கி இருந்த ஆசிரியரை திருவேங்கடம் காவல்துறையினர் போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு கைது சங்கரன்கோவில் அனைத்து மகளிர் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் அந்த அரசு பள்ளி ஆசிரியருக்கு மருத்துவ பரிசோதனை செய்து பின்னர் சிறையில் அடைப்பதற்கான நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். சமீப காலமாக தமிழகத்தில் ஆசிரியர்களால் பள்ளி மாணவிகள் பாலியல் ரீதியாக துன்பப்படுத்தப்படும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது என்பது குறிப்பிடத்தக்க விஷயமாக பார்க்கப்படும் நிலையில் தமிழக அரசும் பள்ளிக் கல்வித்துறையும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே பெற்றோர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Next Story