திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் நடைபெற்றது

திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் ஆட்சியர் சிவசௌந்தரவல்லி தலைமையில் நடைபெற்றது
திருப்பத்தூர் மாவட்டம் கரும்பு விவசாயிகள் கூறுகையில் கரும்பு வெட்டுக்கூலியை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் கரும்பு விலை உயர்ந்த வேண்டும் என்று விவசாயக் குறை தீர்வு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை! விவசாய கூட்டத்திற்கு வரும் அதிகாரிகள் அனைத்து தகவல்களையும் சரியாக கொண்டு வர வேண்டும் மாவட்ட ஆட்சியர் அதிகாரிகளுக்கு எச்சரிக்கை! திருப்பத்தூர் மாவட்டம் திருப்தத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி தலைமையில் நடைபெற்றது. இந்த விவசாயிகள் கூட்டத்தில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதியில் இருந்து விவசாயிகள் கலந்து கொண்டனர் அப்போது விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள குறைகளை எடுத்துக் கூறினர் இதுகுறித்து அதிகாரியிடம் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி கேட்டபோது அதிகாரிகள் பதில் சொல்ல தடுமாறினர் அதன் காரணமாக இனிமே விவசாயக் குறைதீர்வு கூட்டத்திற்கு வரும் பொழுது அதிகாரிகள் முறையான தகவல்களை எடுத்து வர வேண்டும் என எச்சரித்தார். விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார் கரும்பு விவசாயிகள் கூறுகையில் கரும்பு வெட்டுக் கூலியை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் கரும்பு விலை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர் மதுபானக் கடையில் விற்கும் பாட்டில்களை குடிமகன்கள் குடித்துவிட்டு சாலையிலும் விவசாய நிலத்திலும் வீசிவிட்டு செல்கின்றனர் இதனால் விபத்து ஏற்பட்டு மருத்துவமனைக்கு சென்று 2000 மூன்றாயிரம் செலவுகள் ஆகின்றது குடி மகன்கள் குடித்து விட்டு இறந்தால் அரசாங்கம் அவர்களுக்கு 10 லட்சம் நிதி உதவி கொடுக்கின்றது காலி மது பாட்டில்களை அரசாங்கமே திருப்பி எடுத்துக் கொள்ள வழி இருக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர் விவசாயிகளின் முக்கிய பிரதானமாக தென்னை மரம் வகித்து வருகின்றது இதை நம்பி படிப்பு செலவுக்கும் திருமண செலவிற்கும் சிறு குறு நில விவசாயிகள் நம்பி வருகின்றனர் ஆனால் தென்னை மரங்கள் நோய் தாக்கத்தால் காய்ந்து போய் விடுகின்றது தென்னையை நம்பி வாழ்ந்து வரும் விவசாயிகள் மிகுந்த மன உளைச்சல் உள்ளாகி வருகின்றனர் அரசு ஆய்வு மேற்கொண்டு உரிய இழப்பீடுவழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர் இந்தக் குறைதீர்ப்பு கூட்டத்தில் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.மற்றும் முண்ணுறுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்
Next Story