வாணியம்பாடி அருகே குடும்பதகராறில் தனியார் உணவக உரிமையாளரை தாக்கிய நபர்கள்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே குடும்பதகராறில் தனியார் உணவக உரிமையாளரை தாக்கிய நபர்கள் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு.. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பெருமாள்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் இவர் நியுடவுன் பகுதியில் உணவகம் நடத்தி வரும் நிலையில், இவருக்கும் கொத்தகோட்டை பகுதியை சேர்ந்த மோனிஷாவிற்கும் என்பவருக்கும் திருமணம் ஆகி மூன்று குழந்தைகள் உள்ள நிலையில், கணவன், மனைவி இடையே கடந்த சில தினங்களாக குடும்பத்தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது, இந்நிலையில் மோனிஷா, மூன்று குழந்தைகளையும் விட்டு விட்டு, கொத்தக்கோட்டையில் உள்ள தனது தாய்வீட்டிற்கு சென்றுள்ளார், அதனை தொடர்ந்து, இன்று கார்த்தி கொத்தக்கோட்டையிற்கு சென்று அவரது மனைவி மற்றும் குடும்பத்தாரிடம் மோனிஷாவை மீண்டும் தன்னுடன் வாழ அனுப்புமாறு கூறியபோது, கார்த்தியை மோனிஷாவின் குடும்பத்தினர் தாக்கியாக கூறப்படும் நிலையில், அதனை தொடர்ந்து கார்த்தி நியுடவுன் பகுதியில் உள்ள தனது உணவகத்திற்கு வந்த போது, அங்கு வந்த மோனிஷாவின் உறவினர்கள் கார்த்தி மற்றும் அவரது தம்பி சீனிவாசன் என்பவரை சரமாரியாக தாக்கியுள்ளனர், இதில் கார்த்தி, மற்றும் சீனிவாசன் படுகாயமடைந்த நிலையில், அவர்களை அவரது குடும்பத்தினர் மீட்டு சிகிச்சையிற்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.. அதனை தொடர்ந்து கார்த்தி அளித்த புகாரின் பேரில் இச்சம்பவம் குறித்து வாணியம்பாடி நகர காவல்துறையினர், இச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.. மேலும் கார்த்தி மற்றும் அவரது தம்பியை, மோனிஷாவின் உறவினர்கள் சரமாரியாக தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story

