அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கல்

X
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுார் ஸ்ரீ எதிராஜ தாயார் நவராத்திரி உற்சவ அபிவிருத்தி அறக்கட்டளை அரசு பள்ளி மாணவ - மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை, நோட்டு புத்தகம் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது. அந்த வகையில், ராமானுஜர் கோவில் அருகே, ஸ்ரீ அண்ணா சன்னிதியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், அரசு பள்ளியை சேர்ந்த 103 மாணவ - மாணவியருக்கு 1. 30 லட்சம் ரூபாய் கல்வி ஊக்கத்தொகை, நோட்டு புத்தகங்கள், எழுதுபொருட்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டது. அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர்கள் கோவிந்தன், நாராயணன், கோபால், அறக்கட்டளை நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
Next Story

