தென்காசியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆலோசனைக் கூட்டம்

X
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தென்காசி மாவட்ட அணிகளின் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தலைவர் எம் அப்துல் அஜீஸ் தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட உலமாக்கள் அணி தலைவர் இப்ராஹீம் ஹஜரத் இறைவசனம் ஓதினார். மாவட்டச் செயலாளர் செய்யது பட்டாணி வரவேற்றார். கூட்டத்தில் எதிர்வரும் 22ஆம் தேதி நடைபெற இருக்கின்ற அணிகளின் ஆலோசனைக் கூட்டம் மற்றும் கருத்தரங்கத்தை சிறப்பாக நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட வர்த்தக அணி தலைவர் ஹெச். அகமது மீரான், அயலக அணி மாநில பொதுச் செயலாளர் எஸ்.கே.எம். ஹபிபுல்லாஹ், மாநில விவசாய அணி செயலாளர் முகம்மது அலி, மாவட்ட இளைஞரணி தலைவர் செய்யது அபுதாகிர், மாவட்ட விவசாயி தலைவர் மேலப்பாவூர் அப்துல் ரஹ்மான், மாவட்ட தொழிலாளர் அணி தலைவர் முகம்மது இஸ்மாயில், மாவட்ட மாணவர் அணி தலைவர் ரிபாய், மாவட்ட மகளிர் அணி தலைவி அலி பாத்திமா, கடையநல்லூர் நகர பொருளாளர் ஜபருல்லா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாவட்ட பொருளாளர் சைய்யது மசூது நன்றி கூறினார்.
Next Story

