தஞ்சை மாவட்ட இளைஞர் நீதிக்குழுமத்திற்கு சமூகப்பணி உறுப்பினர்கள் நியமனம்

X
இளைஞர் நீதிச் (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டத்தின் (2015) விதிமுறைகளின்படி, தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள இளைஞர் நீதிக்குழுமத்திற்கு சமூகப்பணி உறுப்பினர்கள் நியமிக்கப்படுவதற்காக கீழே குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளைக் கொண்ட தகுதி வாய்ந்த நபர்களிடமிருநது விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இளைஞர் நீதிக் குழுமத்திற்கு ஒரு பெண் உட்பட இரண்டு சமூகப்பணி உறுப்பினர்கள் அரசால் மதிப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனர் மற்றும் இப்பதவி அரசுப் பணி அல்ல. விண்ணப்பதாரர் குழந்தைகள் தொடர்பான உடல் நலம், கல்வி அல்லது குழந்தைகளுக்கான நலப்பணிகளில் குறைந்தது 7 ஆண்டுகள் முனைப்புடன் ஈடுபாடு கொண்டவராக இருத்தல் வேண்டும். (அல்லது) குழந்தை உளவியல், மனநல மருத்துவம், சமூகவியல் அல்லது சட்டம் ஆகியவற்றில் ஏதேனும் பட்டம் பெற்று தொழில் புரிபவராக இருத்தல் வேண்டும். மேலும், விண்ணப்பதாரர்கள் 35 வயதுக்கு குறையாதவராகவும், 65 வயதைப் பூர்த்தி செய்யாதவராகவும் இருத்தல் வேண்டும். இதற்கான விண்ணப்ப படிவத்தை மாவட்ட குந்தைகள் பாதுகாப்பு அலகு, சிறுவருக்கான அரசினர் குழந்தைகள் இல்ல வளாகம், வ.உ.சி. நகர், தஞ்சாவூர்-613 007 என்ற முகவரியிலும் அல்லது துறைச் சார்ந்த இணையதள முகவரியிலிருந்து (https://dsdcpimms.tn.gov.in), thanjavur.nic.in விண்ணப்பதாரர் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தகுதிவாய்ந்த நபர்கள் மேற்கண்ட பதவிக்கு அதற்கான அமைந்த படிவத்தில் 07.03.2025 (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்குள் கீழ்க்கண்ட முகவரியில் கிடைக்கப்பெறுமாறு விண்ணப்பிக்கலாம். இயக்குநர், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை, 300.புரசைவாக்கம் நெடுஞ்சாலை, கெல்லீஸ், சென்னை-600 010. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் மேற்குறிப்பிட்ட அலுவலகத்திற்கு வந்து சேர வேண்டும். தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் அமையும். இது குறித்து அரசின் முடிவே இறுதியானது என மாவட்ட ஆட்சித்தலைவர் பா.பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
Next Story

