திருவையாறு, புன்னைநல்லூர் கோயில்களில் துர்கா ஸ்டாலின் வழிபாடு
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு ஐயாறப்பர் கோயில், புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் தமிழக முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின் வியாழக்கிழமை மாலை வழிபட்டார். திருவையாறு ஐயாறப்பர் கோயிலுக்கு சென்ற துர்கா ஸ்டாலினுக்கு தருமபுர ஆதீனத்தைச் சார்ந்த கட்டளை விசாரணை ஸ்ரீமத் சொக்கலிங்க தம்பிரான் சுவாமிகள், சிவாச்சாரியார்கள் பூர்ண கும்ப மரியாதை கொடுத்து வரவேற்றனர். இதையடுத்து, ஐயாறப்பர் சன்னதி, அறம்வளர்த்த நாயகி சன்னதியில் துர்கா ஸ்டாலின் வழிபட்டார். அப்போது, திருவையாறு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், திமுக மத்திய மாவட்டச் செயலருமான துரை. சந்திரசேகரன், தஞ்சாவூர் தொகுதி மக்களவை உறுப்பினர் ச. முரசொலி உள்ளிட்டோர் உடனிருந்தனர். இதையடுத்து, புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலுக்கு சென்ற துர்கா ஸ்டாலின் அம்மனுக்கு புடவை சாத்தி வழிபட்டார். அப்போது, சட்டப்பேரவை உறுப்பினர்கள் துரை. சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, அறநிலையத் துறை உதவி ஆணையர் கோ. கவிதா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Next Story




