பேராவூரணி அருகே மாயமானவர்  சடலமாக  மீட்பு

பேராவூரணி அருகே மாயமானவர்  சடலமாக  மீட்பு
X
கிரைம்
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே கடந்த 20 நாட்களுக்கு முன்பு மாயமானவர் சடலமாக மீட்கப்பட்டார். பேராவூரணி அருகே உள்ள வலச்சேரிக்காடு  கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர் (47), கூலித் தொழிலாளியான இவருக்கு மனைவி ஜெகதாம்பாள் மற்றும்  ஒரு மகன்,  மகள்  உள்ளனர்.  கடந்த 20 நாட்களுக்கு முன்பு வீட்டிலிருந்து சென்ற சேகர் திரும்பவும் வீடு  திரும்பவில்லை. அவரது உறவினர்கள் அவரைத் தேடி வந்த நிலையில், திருச்சிற்றம்பலம் கண்ணாகுளம் பகுதியில் உள்ள நெல் வயலில் சேகர் உடல் முழுவதும் அழுகிய நிலையில் கிடந்தது  கண்டறியப்பட்டது.   இதுகுறித்து சேகர் மனைவி  ஜெகதாம்பாள் திருச்சிற்றம்பலம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில்,  காவல்துறையினர் சம்பவ இடத்தை பார்வையிட்டு, வழக்குப்பதிவு செய்து, உடல் முழுவதும் அழுகிய நிலையில் காணப்பட்டதால் சம்பவ இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.  சேகர் குடும்பப் பிரச்சனை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா அல்லது யாரும் கொலை செய்து நெல்வயலில் வீசிச் சென்றனரா என பல கோணங்களில் திருச்சிற்றம்பலம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story