காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி எல்ஐசி ஊழியர்கள் போராட்டம்

X
காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும். சங்க அங்கீகாரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம் சார்பில், தஞ்சை கோட்டம், பட்டுக்கோட்டை எல்ஐசி கிளை அலுவலகத்தில், மூன்றாம் பிரிவு மற்றும் நான்காம் பிரிவு ஊழியர்கள் நியாயம் வேண்டி ஒருமணி நேரம் வேலை நிறுத்தப் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கிளைத் தலைவர் வி.எஸ் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். கிளைச் செயலாளர் பி.இளையராஜா வரவேற்றார். லிக்காய் முகவர்கள் சங்க மாநிலத் தலைவர் பூவலிங்கம், களப்பணியளர்கள் கூட்டமைப்பு கிளைப் பிரதிநிதி வேங்கட்ராமன் சிறப்புரையாற்றினர். கிளைப் பிரதிநிதிகள் சம்பத், தியாகராஜன் மற்றும் கிளை சங்க உறுப்பினர்கள், களப்பணியாளர்கள், முகவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். நிறைவாக காமராஜ் நன்றி கூறினார். தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
Next Story

