சுத்தியலால் உறவினரின் மண்டையை உடைத்த விவசாயி கைது

சுத்தியலால் உறவினரின் மண்டையை உடைத்த விவசாயி கைது
X
மார்த்தாண்டம்
குமரி மாவட்டம் இரணியல் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் சிவராஜ் (22). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு கோச்சிங் சென்டரில் படித்து வருகிறார். இவரது உறவினர் மார்த்தாண்டம், திக்குறிச்சி பகுதியை சேர்ந்த சிவகுமார் (41). விவசாயி. சிவகுமாருக்கும் அவரது மகன் நிதின் என்பவருக்கு மிடையே சொத்து பிரச்சனை சம்பந்தமாக தகராறு இருந்து வந்தது. இது குறித்து நிதின் சிவராஜிடம் கூறியுள்ளார்.        இந்த நிலையில் நேற்று சிவராஜ் தனது உறவினரான சிவகுமாரின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது சிவகுமாரிடம்  சமாதானம் பேசிய சிவராஜ், நிதினுக்கு உரிமை பட்ட சொத்து பத்திரத்தை கொடுத்து விடுங்கள் என கேட்டுள்ளார். இதை கேட்டு கொதித்தெழுந்த செல்வகுமார் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.       மேலும் அவர் ஆத்திரமடைந்து தன்  வீட்டில் வைத்திருந்த சுத்தியலை எடுத்து சிவராஜன் தலையில் ஓங்கி அடித்தார். இதில் சிவராஜன் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. மேலும் சிவகுமார் ஆத்திரத்தில் சிவராஜ் முகத்தில் கடித்து விட்டார். இதில் சிவராஜ் படுகாயம் அடைந்தார்.        இதை அடுத்து அவர் மீட்கப்பட்டு அருகில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து சிவராஜ் மார்த்தாண்டம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சிவகுமாரை கைது செய்தனர்.
Next Story