நீலத்தநல்லூரில் நெல் சேமிப்பு தளம் அமைப்பு

நீலத்தநல்லூரில் நெல் சேமிப்பு தளம் அமைப்பு
X
நிகழ்வுகள்
கும்பகோணம் அருகே நீலத்தநல்லூரில் ரூ.8.86 லட்சம் மதிப்பில் மேற்கூரையுடன் கூடிய சேமிப்பு தளத்தை காணொலிக் காட்சி வாயிலாக முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா். நீலத்தநல்லூரில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் சாா்பில் மேற்கூரையுடன் கூடிய சேமிப்பு தளத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தவாறு காணொலி காட்சி வாயிலாக முதல்வா் திறந்து வைத்தாா். இந்நிகழ்வில் எம்.பி., எஸ். கல்யாணசுந்தரம் கலந்து கொண்டு பேசுகையில், நீலத்தநல்லூா் சேமிப்பு தளத்தில் 13 ஆயிரத்து 500 டன் கொள்ளளவு கொண்ட நெல் மூட்டைகளை சேமிக்கலாம். இதனை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா். நிகழ்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலா் (தேசிய நெடுஞ்சாலை) வேலுமணி, நுகா்பொருள் வாணிபக் கழக மேலாளா் (தரக்கட்டுப்பாடு) காா்த்திகை சாமி, மண்டல துணை மேலாளா்கள் வெற்றிச்செல்வன் (கும்பகோணம்), இளங்கோ (தஞ்சை), கும்பகோணம் மாநகராட்சி துணை மேயா் சுப. தமிழழகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
Next Story