தனியார் பள்ளியில் கண்காட்சி நடைபெற்றது

தனியார் பள்ளியில் கண்காட்சி நடைபெற்றது
X
தனியார் பள்ளியில் மாணவ மாணவியரின் கலைத்திறமையை வெளிப்படுத்தும் கண்காட்சி நடைபெற்றது
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் திருச்செங்கோடு சாலையில்,கலைவாணி மெட்ரிக் பள்ளி அமைந்துள்ளது. இங்கு நூற்றுக்கு மேற்பட்ட மாணவ மாணவியர் ப்ரீகேஜி முதல் ஐந்தாம் வகுப்பு வரை கல்வி பயின்று வரும் நிலையில், இந்தப் பள்ளியில் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், குறித்து மாணவர்களுக்கு விளக்கும் வகையில் சிறப்பு கண்காட்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பள்ளியில் கல்வி பயிலும் குழந்தைகள் தங்கள் கலைத்திறனை வெளிப்படுத்தும் வகையில் தங்கள் படைப்புகளை பார்வைக்காக வைத்திருந்தனர். மேலும் இந்த நிகழ்வில் வணிக வியாபாரம் சார்ந்த  புரிதலை ஏற்படுத்தும் வகையில் இருபதுக்கும் மேற்பட்ட இனிப்பு விற்பனை செய்யும் கடைகள், காய்கறி வியாபாரம்,  தர்பூசணி பழம், மோர் விற்பனை, சுண்டல் விற்பனை, நொறுக்குத் தீனி கடை, பேன்சி ஸ்டோர், ஸ்டேஷனரி பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு சிறிய அளவிலான கடைகளை பள்ளியில் கல்வி பயிலும் குழந்தைகள் அமைத்திருந்தனர்.. கண்காட்சியை பார்க்க வருகை தந்த குழந்தைகளின் பெற்றோர் சிற்றுண்டி கடைகளில் உணவுப் பொருட்களை வாங்கி தங்கள் குழந்தைகளுக்கு வழங்கி மகிழ்ந்தனர்.
Next Story