கிராமப்புறங்களில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் முயற்சி - சுத்திகரிப்பு இயந்திரம் தயாரிக்கும் நிறுவனத்தில் நேரடியாக பார்வையிட்டு ஆய்வு

X
விருதுநகர் மாவட்டத்தில் கிராமப்புறங்களில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் முயற்சி - சுத்திகரிப்பு இயந்திரம் தயாரிக்கும் நிறுவனத்தில் நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்த ஆட்சியர் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கிராமங்கள் தோறும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் முயற்சியில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ள நிலையில் காரியாபட்டி அருகே மந்திரிஓடையில் தயாரிக்கப்பட்டு இந்தியா முழுவதும் விற்பனை செய்து வரும் மினரல் வாட்டர் இயந்திர நிறுவனமான மிஸ்டி பியூர் டெக்னாலஜி நிறுவனத்தில் விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெயசீலன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது தண்ணீர் சுத்திகரிப்பு மற்றும் தண்ணீர் விநியோகிப்பான்,ஆலையை பார்வையிட்டு பொதுமக்களுக்கு உபயோகப்படக் கூடிய வகையில் தண்ணீர் விநியோகிப்பானை வடிவமைப்பது பற்றிய கலந்துரையாடலும், மற்றும் கோடைகாலத்தில் பொதுமக்களுக்கு பயனுள்ள தண்ணீர் வழங்குவது சம்பந்தமாக சுத்திகரிப்பு இயந்திரம் தயாரிக்கும் நிறுவனத்திடம் கலந்துரையாடி அறிவுரை வழங்கினார்.
Next Story

