கொள்முதல் செய்த நெல்லுக்கு பணம் உடனடியாக வழங்க வலியுறுத்தி குறைதீர் கூட்டத்தில் நெல் பொட்டலங்களை கழுத்தில் மாலையாக அணிந்து வந்த விவசாயிகள்

X
இராஜபாளையம் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்த நெல்லுக்கு உடனடியாக பணம் பட்டுவாடா செய்ய வலியுறுத்தி குறைதீர் கூட்டத்தில் நெல் பொட்டலங்களை விவசாயிகள் கழுத்தில் மாலையாக அணிந்து பங்கேற்றதால் பரபரப்பு நிலவியது. விவசாயிகள் குறைதீர் கூட்டம் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் விவசாயிகள் நெல் பொட்டலங்களை கழுத்தில் மாலையாக அணிந்து பங்கேற்றனர். கூட்டத்தில் அவர்கள் கூறியதாவது ராஜபாளையம் பகுதியில் சேத்தூர்,தேவதானம் உள்ளிட்ட ஒன்பது இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் உள்ளது. இக்கொள்முதல் நிலையங்கள் மூலமாக கடந்த 8 2 2025 முதல், 18 2 2025 வரை விவசாயிகளிடமிருந்து சுமார் ஒரு லட்சம் மூடைகள் நெல்லை கொள்முதல் செய்யப்பட்டது. விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்ட 48 மணி நேரத்திற்குள் விவசாயிகளின் வங்கி கணக்கில் உரிய பணம் செலுத்தப்பட வேண்டும். ஆனால் இதுவரை 40 ஆயிரம் மூடைகளுக்குரிய பணம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாகவும் மீதமுள்ள 60,000 மூட்டைகளுக்கான பணம் செலுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை "என்று புகார் தெரிவித்தனர். பணம் பட்டுவாடா செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் தெரிவித்தார் கொள்முதல் செய்த நெல்லுக்கு உடனடியாக பணம் பட்டுவாடா செய்ய வலியுறுத்தி குறைதீர் கூட்டத்தில் நெல் பொட்டலங்களை விவசாயிகள் கழுத்தில் மாலையாக அணிந்து பங்கேற்றதால் பரபரப்பு நிலவியது.
Next Story

