ஏசிஎஸ் மெட்ரிக் பள்ளியில் அறிவியல் கண்காட்சி.

ஏசிஎஸ் மெட்ரிக் பள்ளியில் அறிவியல் கண்காட்சி.
X
ஆரணியில் கடந்த 30 ஆண்டுகளாக சிறந்த கல்வி சேவையை வழங்கி வரும் ஏ சி எஸ் கல்வி குழுமத்தின் ஒரு அங்கமான ஏசிஎஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
ஆரணியில் கடந்த 30 ஆண்டுகளாக சிறந்த கல்வி சேவையை வழங்கி வரும் ஏ சி எஸ் கல்வி குழுமத்தின் ஒரு அங்கமான ஏசிஎஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இக்கண்காட்சியில் ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவியர் 300க்கும் அதிகமான தங்கள் அறிவியல் படைப்புகளை சமர்ப்பித்தனர். இதில் ஏசிஎஸ் கல்வி குழுமத்தின் தலைவர் ஏ.சி.எஸ்.அருண்குமார் கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டார். மேலும் மாணவர்கள் அறிவியல் கண்காட்சியில் வைக்கப்பட்ட படைப்புகள் குறித்து தகவல்களை கேட்டு அறிந்தார். பின்னர் மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக சிறந்த 50 படைப்புகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார். உடன் கல்லூரி செயலாளர் ஏ.சி.ரவி, தனி அலுவலர் பி.ஸ்டாலின், பள்ளி முதல்வர் ராஜேஸ்வரி, எஸ்பிசி பொறியியல் கல்லூரி முதல்வர் திருநாவுக்கரசு, டாக்டர் எம்ஜிஆர் சொக்கலிங்கம் கலைக்கல்லூரி முதல்வர் கந்தசாமி, கண்ணம்மாள் சிபிஎஸ்இ பன்னாட்டு பள்ளி சீனியர் முதல்வர் அருளாளன், துணை முதல்வர் ஜெகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story