புதிய வக்புபோர்டு சட்ட திருத்த மசோதா நிறைவேற்றிய மத்திய அரசை கண்டித்து
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வக்புபோர்டு சட்ட திருத்த மசோதாவை, முஸ்லிம் அமைப்புகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதன்படி, நாகை மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த ஆழியூர் ஜாமியுல் மஸ்ஜித் நிர்வாக சபை மற்றும் ஊர்மக்கள் சார்பில், ஆழியூர் ஜாமியுல் மஸ்ஜித் பள்ளிவாசல் முன் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, ஆழியூர் ஜாமியுல் மஸ்ஜித் நிர்வாக சபை தலைவர் ஏ.அப்துல் அஜீஸ் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும். வக்பு வாரிய உறுப்பினர்களாக முஸ்லிம் அல்லாதவர்களை நியமிக்க கூடாது என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில்,ஜாமியுல் மஸ்ஜித் நிர்வாக சபை நிஜாம் மைதீன் ஃபைஜி இனாம் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட 300- க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
Next Story




