நவீன சேமிப்பு கிடங்கு திறப்பு விழா.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் சார்பில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டம் மூவோநல்லூர் கிராமத்தில் மேற்கூரை அமைப்புடன் கூடிய நவீன சேமிப்பு தளம் திறந்து வைக்கும் நிகழ்வு நடைபெற்றது. சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக இந்த சேமிப்பு கிடங்கினை திறந்து வைத்தார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story



