கட்டுமான பொருட்கள் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்.

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஜல்லி, எம் சாண்ட் உள்ளிட்டு கட்டுமான பொருட்களின் இரு மடங்கு விலை உயர்வை கண்டித்து கட்டுமான ஒப்பந்ததாரர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஜல்லி, எம் சாண்ட் போன்ற கட்டுமான பொருட்களின் இரு மடங்கு விலை ஏற்றத்தை கண்டித்தும் இதனை கட்டுப்படுத்த தவறியுள்ள தமிழக அரசைக் கண்டித்தும் அனைத்து கட்டுமான ஒப்பந்ததாரர்கள்,தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டமானது திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து கட்டுமான ஒப்பந்ததாரர்கள், பொறியாளர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று தமிழக அரசு இந்த முடிவை திரும்ப பெரும் வரை தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாகவும் தெரிவித்தனர்.
Next Story