வனத்துறையினர் அலட்சியப் போக்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்

X
பெரம்பலூர் மாவட்டம் நாரணமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் குமரகுருபன் இவர் அவருக்கு சொந்தமான பட்டா நிலத்தில் ஒரு ஆர்வத்தில் ஏழரை ஏக்கர் சந்தன மரம் தேக்கு மாகனி வேங்கை போன்ற மரங்களை நட்டு வளர்த்து வந்துள்ளார் இதில் சுமார் 300 சந்தன மரங்களை வெட்டி விற்பதற்காக வனத்துறையே அடங்கியுள்ளார் அதனை தொடர்ந்து கடந்த 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி அளந்து வெட்டிய அதற்கு அடுத்த மார்ச் மாதம் சேலம் வனத்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர் மொத்தம் மூணு முக்கால் டன் எடை இருந்துள்ளது பின்னர் 5 மாதம் கழித்து கிலோவிற்கு 373 விலை நிர்ணயம் செய்து 13 லட்சத்திற்கு உள்ளதாகவும் அதில் நிர்வாக செலவு 20% போக மீதம் 10 லட்சம் தரப்படும் என ஆர்டர் போட்டு வனத்துறை அனுப்பியதாகவும் குமரகுருபன் தெரிவித்துள்ளார் பணம் கைக்கு வராதால் பெரும் சிரமத்தை சந்தித்து வருவதாகவும் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் தனக்கு சேர வேண்டிய பணத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மேலும் சிலரும் தம்மை போல் சந்தனம் கட்டைகளை வனத்துறை இடம் கொடுத்துவிட்டு பணம் கிடைக்காமல் சிரமப்பட்டு வருகின்றனர் என்பதும் தெரிவித்துள்ளார்.
Next Story

