மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
X
ஆய்வு
கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் முதல்வர் மருந்தகத்தை கலெக்டர், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் 7, தனியார் நிர்வாகம் 8 என மொத்தம் 15 முதல்வர் மருந்தகங்கள் உள்ளன. தரமான மருந்துகளை, அடக்க விலையில் இருந்து, 25 முதல் 90 சதவீதம் வரை தள்ளுபடி செய்து பொதுமக்களுக்கு வழங்குவது இந்த மருந்தகத்தின் நோக்கம். இந்நிலையில் கள்ளக்குறிச்சி பஸ் நிலைய முதல்வர் மருந்தகம், நேப்பால் தெரு, முதல்வர் மருந்தக மொத்த சேமிப்பு கிடங்கு ஆகியவற்றை கலெக்டர் பிரசாந்த் முன்னிலையில், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மதுசூதன்ரெட்டி ஆய்வு செய்தார். அப்போது செயல்பாடுகள், அரசு உதவிகள், மருந்துகளின் தரம் மற்றும் விற்பனை, திட்ட அனுமதி, திறப்பு விழா பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
Next Story