புதிய மாவட்டச் செயலாளருக்கு உற்சாக வரவேற்பு அமைச்சர் மதிவேந்தன் பங்கேற்பு
நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் ஆக கடந்த இரண்டரை வருடங்களாக மதுரா செந்தில் என்பவர் நியமிக்கப்பட்டு அவர் செயல்பட்டு வந்தார் இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு மதுரா செந்தில் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார் இதனை அடுத்து முன்னாள் முன்னாள் பரமத்தி வேலூர் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளரான கே எஸ் மூர்த்தி மீண்டும் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் ஆக நியமிக்க ப்பட்டுள்ளார். இதனை அடுத்து இன்று புதியதாக நியமிக்கப்பட்டுள்ள திமுக நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் கே எஸ் மூர்த்திக்கு திருச்செங்கோடு அண்ணா சிலை அருகே உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் திமுக தலைமைக் கழக உறுப்பினர் நடேசன், நகரச் செயலாளர் கார்த்திகேயன்,திருச்செங்கோடு நகர மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு உள்ளிட்ட பிரமுகர்கள் மற்றும் திமுக சார்பு அணி நிர்வாகிகள் உள்ளிட்ட இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று கே எஸ் மூர்த்திக்கு பூரணக் கும்பம் மரியாதை, ஆடல் பாடலுடன் உற்சாக வரவேற்பளித்தனர் திருச்செங்கோடு அண்ணா சிலைக்கு அமைச்சர் மதிவேந்தன் மற்றும் நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் கே எஸ் மூர்த்தி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் இதனை அடுத்து தொண்டர்கள் இடையே பேசிய அமைச்சர் மதிவேந்தன் கூறும்போது நாமக்கல் மேற்கு மாவட்ட தொகுதியில் உள்ள பரமத்தி திருச்செங்கோடு குமாரபாளையம் ஆகிய மூன்று தொகுதிகளில் வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று அந்த வெற்றியை திமுக தலைவரும் தமிழக முதல் வருமான ஸ்டாலின் அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற உறுதியை இங்கு உள்ள தொண்டர்கள் ஏற்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் ஏராளமான தொண்டர்கள் சார்பு பணி நிர்வாகிகள் புதியதாக பொறுப்பேற்றுள்ள நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளருக்கு சால்வை அணிவித்தும் பூங்கொத்துக்கொடுத்தும் செங்கோல் கொடுத்தும் வாழ்த்து தெரிவித்தனர்
Next Story









