திருவேங்கடத்தில் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வைத்து ஆண்டு விழா நடைபெற்றது

திருவேங்கடத்தில் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வைத்து ஆண்டு விழா நடைபெற்றது
X
மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வைத்து ஆண்டு விழா நடைபெற்றது
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகில் திருவேங்கடம் ஸ்ரீ கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 37 வது ஆண்டு விழா கொண்டாட்டம் ஸ்ரீ கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டுவிழா தொடங்கியது. இதில் திருவேங்கடம் பஞ்சாயத்து துணை தலைவர் சேர்மத்துரை மற்றும் கவுன்சிலர் மாரிமுத்து அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள். இவ்விழாவிற்கு திருவேங்கடம் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மனோகரன் அவர்கள் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக துணை தாசில்தார் திரு. ஜெயமுருகன் அவர்கள் கலந்துகொண்டார். அன்றைய விழாவில் வகுப்பு வாரியாக முதல் மூன்று மதிப்பெண்களை பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. அரசு பொதுத்தேர்வில் பள்ளி அளவில் முதல் மூன்று மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு மற்றும் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. பாடவாரியாக 100/100 மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவியர்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்பட்டது. 100/100 மதிப்பெண் பெற ஊக்கம் கொடுத்த ஆசிரியர்களுக்கும் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. 100% வருகை புரிந்த ஆசிரியர் மற்றும் ஆசிரியைகளுக்கும் பரிசு மற்றும் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. அதை தொடர்ந்து மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது .பள்ளி முதல்வர் பொன்னழகன் அவர்கள் நன்றியுரை வழங்கி விழா சிறப்பாக நடைபெற்றது.
Next Story