ராமநாதபுரம் வக்ஃபு மசோதா பொதுக்கூட்டம் நடைபெற்றது

X
ராமநாதபுரம் தொண்டியில் வக்ஃபு மசோதா 2024 ஐ ரத்து செய்யவும் ,1991 வழிபாட்டுத்தலங்கள் பாதுகாப்பு சட்டத்தை அமுல்படுத்தக் கோரியும் எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பில் பொதுக் கூட்டம் நடைபெற்றது மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் ஃபாயிஷா ஷஃபிகா, மாநில செயற்குழு உறுப்பினர் ரத்னம் உட்பட எஸ்.டி.பி.ஐ நிர்வாகிகள் பலர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் தாளை அப்துல் மஜித் வரவேற்றார். விமன் இந்தியா மூவ்மெண்ட் மாநில பொதுச் செயலாளர் ஃபாயிஷா ஷஃபிகா வஃக்பு சொத்து குறித்து பேசினார். மாநில தலைவர் நெல்லை முபாரக் பேசும் போது, 8 லட்சம் ஏக்கர் இஸ்லாமிய நிலத்தை கொண்டுள்ளது வஃக்பு சொத்து தமிழ்நாட்டில் மட்டும் 2 லட்சம் ஏக்கர் இஸ்லாமிய நிலம் உள்ளது. வக்பு திருத்த சட்டத்தை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று பேசினார். தொண்டிக்கு மகளிர் கல்லூரி கேட்டு , தொண்டி, நம்புதாளை பகுதிகளில் கழிவு நீர் கால்வாய் அமைக்க கோரியும், பஞ்சாயத்து தலைவர்கள் பொறுப்பு இல்லாத நிலையில், உள்ளாட்சி அமைப்புகளில் அடிப்படை வசதிகளில் செயல் அலுவலர்கள் கவனம் செலுத்த கேட்டும், அரசு பணிமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தி போதிய போதிய மருத்துவர்களை நியமிக்கவும் அருகே பொதுப்பணித் துறைக்குச் சொந்தமாக பயனற்று கிடக்கும் இடத்தை அரசு மருத்துவமனைக்காக பயன்படுத்த கோரிக்கை விடுத்தனர். நகர தலைவர் முகமது நாசர் அலி, வழக்கறிஞர் அணி ஒருங்கிணைப்பாளர் கலந்தர் ஆசிக் அஹமது உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொகுதி செயலாளர் ஹமீது நன்றி கூறினார்.
Next Story

