அதிமுக சார்பில் திண்ணைப் பிரச்சாரம்

அரசியல்
புரட்சித்தலைவி அம்மா பேரவை சார்பாக தமிழ்நாடு முழுவதும் திண்ணை பிரச்சாரம் செய்து திமுக அரசின் அவலங்களை துண்டு பிரசுரமாகவும் வழங்குகின்ற நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக தஞ்சை தெற்கு மாவட்டம் பேராவூரணி தெற்கு ஒன்றிய கழகத்தின் சார்பாக ஆவணம் பெரியநாயகிபுரம் கடைவீதியில் தெருமுனை பிரச்சாரக் கூட்டமும் துண்டு பிரசுரம் வழங்குகின்ற நிகழ்வு நடைபெற்றது. மாவட்டக் கழக செயலாளர், முன்னாள் எம்எல்ஏ சி.விசேகர் தலைமை வகித்தார், மாநில அமைப்பு செயலாளர் துரை.செந்தில், அம்மா பேரவை இணைச் செயலாளர் இரா.கார்த்திகேயன், அம்மா பேரவை துணைச் செயலாளர் எஸ்.டி.எஸ்.செல்வம், மாநில விவசாய பிரிவு இணைச் செயலாளர், முன்னாள் எம்எல்ஏ மா.கோவிந்தராசு, மாவட்ட அவைத் தலைவர் முன்னாள் எம்எல்ஏ எஸ்.வி.திருஞானசம்பந்தம் அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர், முன்னாள் எம்எல்ஏ பி.என். ராமச்சந்திரன், மாநில எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் மலைஅய்யன், மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் எஸ்.ஆர்.ஜவஹர்பாபு, ஆகியோர் முன்னிலை வகித்தனர் வரவேற்புரை துலுக்கவிடுதி ராமநாதன் நன்றியுரை ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் ஞானபண்டிதன், இந்நிகழ்வில் ஒன்றிய கழக செயலாளர் கோவி.இளங்கோ, வி.ஆர்.மதியழகன் (திருவோணம் தெற்கு) கே.எஸ்.அருணாச்சலம் (சேதுபாவாசத்திரம் தெற்கு) உ.துரைமாணிக்கம் (பேராவூரணி வடக்கு) முன்னாள் மாநில கயிறு வாரிய தலைவர் எஸ்.நீலகண்டன், பட்டுக்கோட்டை ஒன்றிய கழகச் செயலாளர்கள் மலை.முருகேசன், எம்.சி.முருகானந்தம், கே.கல்யாணசுந்தரம் மற்றும் அம்மா பேரவையின் துணைத் தலைவர் பா.அடைக்கலம், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் வை.முத்துராமன், கே.வி.சரவணன், ஈகை செல்வம், களத்தூர் முருகன், முன்னாள் ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் வீரசிங்கம் உள்ளிட்ட திரளான கழக உடன்பிறப்புகள் முன்னோடிகள் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்து கொண்டனர்.
Next Story