பேராவூரணி குமரப்பா பள்ளியில் விளையாட்டு விழா

X
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி குமரப்பா பள்ளியில், விளையாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்க மாநிலப் பொருளாளர் முனைவர் ஜி.ஆர்.ஸ்ரீதர் தலைமை வகித்தார். சி.பி.எஸ்.இ பள்ளி ஆசிரியர் அனுஷியாகுருஸ் வரவேற்றார். ஓய்வுபெற்ற உடற்கல்வி இயக்குனர் ரவிச்சந்தர் விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். எல்.கே.ஜி முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 25, 50, 100, 200, 400, 800 மீட்டர் தூரம் ஓட்டப்பந்தயங்கள், குண்டு எறிதல் என பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் பள்ளி நிர்வாக இயக்குநர் நாகூர்பிச்சை, அறங்காவலர்கள் ராமு, கணபதி, ஆனந்தன், நபிஷாபேகம், பள்ளி முதல்வர் சர்மிளா, நிர்வாக அலுவலர் சுரேஷ், உடற்கல்வி ஆசிரியர்கள் முரளிதரன், ரமேஷ், தீபிகா, ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story

