தாபா ஓட்டல்களில் இரவில் நடந்த உணவுத்துறை அதிகாரிகள் ஆய்வு

தாபா ஓட்டல்களில் இரவில் நடந்த உணவுத்துறை அதிகாரிகள் ஆய்வு
X
குமாரபாளையம் பகுதியில் உள்ள  தாபா ஹோட்டல்களில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நேற்றிரவு ஆய்வு மேற்கொண்டனர்
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் உள்ள  தாபா ஹோட்டல்களில் மாவட்ட கலெக்டர்   உத்தரவின் பேரில், உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் அருண்  தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நேற்றிரவு ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது குளிர்சாதனப்பட்டியில் வைக்கப்பட்டிருந்த சமைக்கப்பட்ட உணவு வகைகள் பறிமுதல் செய்து கொட்டி அழிக்கப்பட்டது.  மேலும் சுகாதாரமற்ற முறையில் செயல்படும் தாபாக்களுக்கு சட்டப்பூர்வ நோட்டீஸ் வழங்கப்பட்டு குறைபாடுகளை சரி செய்ய அறிவுறுத்தப்பட்டது தயாரிப்பு காலாவதி தேதி, அச்சிடாத உணவு பொருள் பாக்கெட்டுகள் 20 கிலோ,  பிளாஸ்டிக் கவர் ஐந்து கிலோ பறிமுதல் செய்யப்பட்டது.  12 ஆயிரம் ரூபாய் அபராதம்  விதிக்கப்பட்டது. மாவட்ட நியமன அலுவலர் அருண் கூறியதாவது:  ரோட்டு தாபா உணவகங்களில் சுகாதாரமான முறையில் உணவு வழங்கவும்,  உணவகங்களில் மதுபானங்கள் விற்பனை செய்தால், அந்த கடையின் மீது  கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Next Story