சந்தைக்கு சென்றவர் மர்மமான முறையில் பலி

சந்தைக்கு சென்றவர் மர்மமான முறையில் பலி
X
குமாரபாளையத்தில் சந்தைக்கு சென்றவர் மர்மமான முறையில் பலியானார்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் வளையக்காரனூர் பகுதியில் வசிப்பவர் ஆறுமுகம், 59. காய்கறி வியாபாரம். பிப். 13ல் வட்டமலை சந்தைக்கு போவதாக கூறி, அன்று மாலை 04:00 மணிக்கு சென்றார். அன்றைய தினம் வீட்டுக்கு வரவில்லை. இவர் அடிக்கடி வீட்டில் சொல்லாமல் சொந்த ஊருக்கு பொய் விட்டு, சில நாட்கள் கழித்து வருவது வழக்கம் என்று, இவரது குடும்பத்தினர் இருந்து விட்டனர். பிப்.21ல் இவரது உறவினர் பாலமுருகன், ஆறுமுகம் மனைவி வசம், போனில் வந்த போட்டோவை காட்டினார். அது ஆறுமுகம் போல் இருப்பது கண்டு, குமாரபாளையம் போலீசில் விசாரித்தனர். பிப்.14ல் ஆனங்கூர் மதுக்கடை முன்பு கீழே விழுந்து கிடந்தவரை ஆம்புலன்ஸ் மூலம் குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்ந்துள்ளனர். இவரை மேல் சிகிச்சைக்காக ஈரோடு, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இவர் சிகிச்சை பலனின்றி பிப். 20ல் இறந்தார் என்று போலீசார் கூறினர். இது குறித்து இவரது மனைவி பொன்னியம்மாள் குமாரபாளையம் போலீசில், கணவரின் இறப்பு குறித்து விசாரணை செய்திட வேண்டி புகார் கொடுத்தார்.
Next Story