இளம் தளிர் என்ற தலைப்பில் நடத்திய ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளின் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தர்

இளம் தளிர் என்ற தலைப்பில் நடத்திய ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளின் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர்   தொடங்கி வைத்தர்
X
இளம் தளிர் என்ற தலைப்பில் நடத்திய ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளின் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தொடங்கி வைத்தார்.
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி ஜி.எஸ்.டி மஹாலில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் மற்றும் பொது சுகாதாரத்துறை இணைந்து, இளம் தளிர் என்ற தலைப்பில் நடத்திய ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளின் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது: குழந்தைகளுக்கு ஆறு மாதத்திலிருந்து ஆறு வயது வரை அந்த குழந்தைகளுடைய வளர்ச்சிக்கு கிடைக்க வேண்டிய ஊட்டச்சத்து முழுமையாக கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். ஆறு மாதம் வரைக்கும் தாய்ப்பால் மட்டும்தான் கொடுக்கிறோம். அதன் பின்பு அந்த குழந்தைக்கு ஆறு மாதத்தில் இருந்து இணை உணவுகளை கொடுக்கின்ற போது, அதை ஊட்டச்சத்து மிக்கதாக எப்படி தொடர்ச்சியாக அந்த குழந்தைக்கு கொடுப்பது என்பதை பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டும். சத்தான உணவுகள் என்பது செலவு அதிகமாகும் என்று இல்லை. நமது பகுதியில் கிடைக்கக்கூடிய சிறு சிறு உணவுப் பொருட்களைக் கூட தொடர்ச்சியாக அவர்களுக்கு கொடுப்பதன் மூலமாகவும், குறிப்பாக செரிமானம் ஆகக்கூடிய அளவிலான புரதச்சத்து கொடுப்பதை உறுதி செய்ய வேண்டும். புரதச்சத்து குழந்தைகளின் உடல் கட்டமைப்பு வளர்ச்சிக்கு மிகவும் அவசியம். அது எந்த உணவில் அதிகமாக கிடைக்கும் என்பதெல்லாம் இந்த கருத்தரங்கில் மருத்துவர்கள் எடுத்துக்கூற உள்ளனர். எதிர்காலத்தில் ஒரு ஆரோக்கியமான குழந்தைகளை உருவாக்குவது மிகவும் அவசியம். அது 6 மாதம் முதல் 6 வயது வரை பெற்றோர்கள் கொடுக்கக்கூடிய உணவில் தான் இருக்கிறது. இதையெல்லாம் உங்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்பதற்காக இன்று கருத்தரங்கு நடைபெறுகிறது. இதை நல்ல முறையில் பயன்படுத்தி கவனித்து நல்ல ஆரோக்கியமான எதிர்காலத்தை உருவாக்க வேண்டும். மேலும், குழந்தைகளுக்கு ஏற்படும் உடல் நலம் சார்ந்த பிரச்சனைகளுக்கு அறிவியலால் நிரூபிக்கப்படாத முறையை பின்பற்றுவது தவறாகும். குறிப்பாக கிராமங்களில் தொக்கு எடுப்பது என்பது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படவில்லை. எனவே அதை மருத்துவ ரீதியாக பார்த்து அதற்கான மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். நமது பகுதிகளில் மருத்துவர்கள், செவிலியர்கள் இருக்கிறார்கள். குழந்தைகளுக்கு ஏதாவது ஒரு பிரச்சனை என்றால் குழந்தைகளை அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு மருத்துவம் பார்த்து சரி செய்வதற்கும், நல்ல சத்தான சாப்பாடு கொடுப்பதும் மிகவும் முக்கியம். அதனை எடுத்துக்கூறும் வகையில் தான் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
Next Story