திருச்சுழி வட்டாட்சியர் அலுவலகம் எதிரே கருவேல முட்செடிகள் மற்றும் குப்பை குவியலாக காட்சி அளிக்கும் திருச்சுழி அம்மா பூங்கா : மீண்டும் சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக

திருச்சுழி வட்டாட்சியர் அலுவலகம் எதிரே கருவேல முட்செடிகள் மற்றும் குப்பை குவியலாக காட்சி அளிக்கும் திருச்சுழி அம்மா பூங்கா : மீண்டும் சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக
X
திருச்சுழி வட்டாட்சியர் அலுவலகம் எதிரே கருவேல முட்செடிகள் மற்றும் குப்பை குவியலாக காட்சி அளிக்கும் திருச்சுழி அம்மா பூங்கா : மீண்டும் சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் கோரிக்கை*
திருச்சுழி வட்டாட்சியர் அலுவலகம் எதிரே கருவேல முட்செடிகள் மற்றும் குப்பை குவியலாக காட்சி அளிக்கும் திருச்சுழி அம்மா பூங்கா : மீண்டும் சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் கோரிக்கை விருதுநகர் மாவட்டம் திருச்சுழி வட்டாட்சியர் அலுவலகம் எதிரே உள்ள முத்துராமலிங்கம் நகர் குடியிருப்புப் பகுதியில் உடற்பயிற்சி கருவிகளுடன் கூடிய அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடத்தை கடந்த அதிமுக ஆட்சியில் அப்போதைய பால்வளத்துறை அமைச்சர் கே.டி.இராஜேந்திர பாலாஜி திறந்து வைத்தார். இந்த நிலையில், அம்மா பூங்காவில் குழந்தைகளுக்கான விளையாட்டு கருவிகள், பல்வேறு பொழுதுபோக்கு விளையாட்டு கருவிகள் மற்றும் இளைஞர்களுக்கு பயனளிக்கும் வகையில் பளுதூக்குதல், தண்டால் கருவிகள் உள்ளிட்ட பல்வேறு உடற்பயிற்சி கருவிகளும் இருந்தன. இதனால் அப்பகுதியில் வசித்து வரும் குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் கர்ப்பிணி தாய்மார்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் இந்த அம்மா பூங்காவால் பயனடைந்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 2021ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விளம்பர திமுக அரசு அரசின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற நிலையில் அதிமுக ஆட்சியில் திறக்கப்பட்ட அம்மா பூங்காவை திருச்சுழி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான தங்கம்தென்னரசு வோ, அதிகாரிகளோ யாருமே கண்டு கொள்வதில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் அம்மா பூங்காவில் சீமைக் கருவேல கருவேல முட்செடிகள் அடர்ந்து வளர்ந்த நிலையில், பல வருடங்களாக அம்மா பூங்கா வளாகம் முட்புதர்கள் மற்றும் குப்பை கூழாங்களால் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் காலப்போக்கில் குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் வருகை இன்றி அம்மா பூங்கா வெறிச்சோடி காணப்படுகிறது. இந்த நிலையில், அப்பகுதியில் வசிக்கும் குழந்தைகள் மற்றும் பள்ளி மாணவர்கள் அந்த பகுதியில் வேறு விளையாட்டு மைதானங்கள் இல்லாததால் ஆபத்தை உணராமல் நாள்தோறும் முட்செடிகள் சூழ்ந்து காணப்படும் இந்த அம்மா பூங்காவில் விளையாடி பொழுதை கழித்து வருகின்றனர். மேலும் அம்மா பூங்கா வளாகம் முழுவதும் குப்பைகளாக காட்சி அளித்து வரும் நிலையில், முட்செடிகள் மற்றும் குப்பைகளுக்கு நடுவே சிறுவர், சிறுமியர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் விளையாடி வருவதால் பெரும்பாலான நேரங்களில் முட்செடிகளில் விழுந்து உடலில் காயம் ஏற்பட்டு வீட்டிற்கு செல்கின்றனர். மேலும் அப்பகுதியில் வசிக்கும் குழந்தைகளின் பெற்றோர்கள் சேதம் அடைந்துள்ள அம்மா பூங்காவிற்கு தங்கள் குழந்தைகளை அனுப்ப அச்சமடைந்து வருகின்றனர். மேலும் முட்செடிகள், குப்பைகள் மட்டுமல்லாமல் அம்மா பூங்காவைச் சுற்றிலும் சாக்கடை கழிவுநீர் சூழ்ந்துள்ளதால் அம்மா பூங்கா பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் அம்மா பூங்காவைச் சுற்றியுள்ள காம்பவுண்ட் சுவர்களும் ஆங்காங்கே பெயர்ந்து விழுந்து கிடக்கின்றன. மேலும் பூங்காவிற்குள் பாம்பு போன்ற பல்வேறு விஷ ஜந்துக்கள் உள்ளே புகுந்து பூங்காவில் விளையாடும் குழந்தைகளை கடித்து அதனால் குழந்தைகள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். ஆகையால் முட்செடிகள் மற்றும் கழிவுநீர் சூழ்ந்து காணப்படும் அம்மா பூங்காவை மீண்டும் புனரமைத்து, ஏற்கனவே இருந்த உடற்பயிற்சி கருவிகளை மீண்டும் நிறுவி அம்மா பூங்காவை சீரமைக்க வேண்டும் எனவும், மீண்டும் அம்மா பூங்காவை புத்தம் புதுப்பொலிவுடன் சிறப்பாக செயல்படும் வகையில் மராமத்துப் பணிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் எனவும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். பேட்டி : 1. வேல்முருகன் 2. கணேசன்
Next Story