பஸ் நிலையத்தில் முதியவர் தூக்கு போட்டு தற்கொலை

X
குமரி மாவட்டம் பனச்சமூடு பகுதியில் தமிழக - கேரள மாநில எல்லைப் பகுதியில் பஸ் நிலையம் உள்ளது. இதில் தமிழக பஸ்கள் நின்று செல்லும் வகையில் அமைக்கப்பட்டது. தற்போது இந்த பஸ் நிலையம் பராமரிப்பின்றி உள்ளது. ஒரு சில தமிழக பஸ்கள் மட்டுமே இங்கு நின்று செல்வது வழக்கம். இதனால் மக்கள் கூட்டம் பெரிதாக இருக்காது. இந்த நிலையில் இன்று காலை 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் பஸ் நிலையத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். இது குறித்து அப்பகுதியினர் அருமனை போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சடலத்தை மீட்டு குலுத்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில் தற்கொலை செய்து கொண்டவர் புலியூர் சாலை பகுதியை சேர்ந்த பஷீர் (62)என்ற கூலி தொழிலாளி என்பது தெரியவந்தது. இவர் மது பழக்கத்திற்கு அடிமையானதால் மனைவி பிள்ளைகள் அவரை பிரிந்து சென்று விட்டனர். இதனால் தனியாக வாசித்து வந்த பஷீர் மது குடித்துவிட்டு பஸ் நிலையத்தில் தங்கி இருந்துள்ளார். இந்த நிலையில் தனிமையின் விரக்தி காரணமாக தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.
Next Story

