கன்னியாகுமரியில் போலி தங்க காசு கொடுத்து பணம் மோசடி

கன்னியாகுமரியில் போலி தங்க காசு கொடுத்து பணம் மோசடி
X
வழக்கு பதிவு
கன்னியாகுமரி அருகே அகஸ்தீஸ்வரம் பகுதியை சேர்ந்த  அருள்தாஸ் என்பவரும், லீபுரம் பகுதி சேர்ந்த காண்ட்ராக்டர் ஆன பால்ராஜ் (45)என்பவரும் நண்பர்கள். பால்ராஜ் தன்னிடம் தங்க காசுகள் இருப்பதாகவும் அதை பாதி விலைக்கு தருவதாகவும் அருள்தாசிடம் ஆசை  வார்த்தை கூறியுள்ளார். இதை யடுத்து அருள்தாஸ் பல்வேறு தவணைகளாக ரூபாய் 12 லட்சத்து 50 ஆயிரத்தை அவரிடம் கொடுத்துள்ளார். பின்னர் பால்ராஜ் தங்க காசுகளை கொடுத்துள்ளார். அது சோதனை செய்தபோது அது போலி என  தெரிய வந்தது.       இது குறித்து அருள்தாஸ் தங்க தங்க காசு கொடுத்த பால்ராஜிடம் கேட்டுள்ளார். அப்போது  இதை  போலீஸ்க்கு தெரிவிக்க வேண்டாம் என்றும், தான் பணத்தை தந்து விடுவதாக கூறி முதற்கட்டமாக ரூ.  5 லட்சத்தை கொடுத்துள்ளார். இதை அடுத்து மீறி பணத்தை அருள்தாஸ் கேட்க வந்துள்ளார். ஆனால் பால்ராஜ் பணத்தை கொடுக்காமல் தகாத வார்த்தைகள் பேசி அரிவாளை காட்டி மிரட்டி உள்ளார்.       இதை அடுத்து அருள்தாஸ் சம்பவ தினம் விஷத்தை குடித்துவிட்டு பால்ராஜ் வீட்டிற்கு சென்று அமர்ந்து கொண்டார். அவர் விஷத்தை குடித்து குடித்து விட்டார் என்பதை அறிந்து அவருடைய மாமியார், மனைவி லிங்கேஸ்வரி ஆகியோர் அங்கு சென்று அருள்தாஸ் மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி அனுமதித்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.        இந்த சம்பவம் குறித்து லிங்கேஸ்வரி கன்னியாகுமரி போலீசில் புகார் செய்தார்.  புகாரின் பேரில் போலீசார் போலி தங்க காசு கொடுத்து ஏமாற்றி பணத்தை மோசடி செய்து, மிரட்டல் கொடுத்த பால்ராஜ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story