ஓடும் ஆட்டோவில் செல்போன் திருடியவர் கைது 

ஓடும் ஆட்டோவில் செல்போன் திருடியவர் கைது 
X
கன்னியாகுமரி
கன்னியாகுமரி ஹைகிரவுண்ட் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (32). ஆட்டோ டிரைவர். இவர் நேற்று வழக்கம்போல் ஆட்டோவில் சவாரிக்காக காத்திருந்தார். அப்போது ஒருவர் ஆட்டோ சவாரிக்கு கேட்டு,  பின்னர்  குறிப்பிட்ட  இடத்தை கூறி அந்த ஆட்டோவில் ஏறி சென்றுள்ளார்.      ஆட்டோ புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. அப்போது ஆட்டோவின்  ஒரு பகுதியில் சரவணன் தனது செல்போனை வைத்திருந்தார். இதை கண்ட பயணி நைசாக சரவணன் செல்போனை திருடி விட்டார்.       அதை எதார்த்தமாக சரவணன் பார்த்து உடனே ஆட்டோவை நிறுத்தி கூச்சலிட்டர். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அந்த நபரை  பிடித்து தனது செல்போனை மீட்டார்.       இதை அடுத்து கன்னியாகுமரி போலீஸ் நிலையத்தில் கொண்டு ஒப்படைத்தனர். போலீசார் பிடித்து விசாரித்த போது பயணி தூத்துக்குடி மாவட்டம் சேர்ந்த அனந்தன் (44) என்பது தெரிய வந்தது. இவர் அந்த பகுதியில் மளிகை கடை நடத்தி வருவதாகவும், கன்னியாகுமரிக்கு ஒரு வேலை விஷயமாக வந்ததாகவும், ஆட்டோவில் இருந்து செல்போனை பார்த்ததும் திருடிவிட்டதாகவும் தெரிய வந்தது. போலீசார் கைது செய்தனர்.
Next Story