வானுாரில் முதல்வரை வரவேற்று பேனர் அ.தி.மு.க.,வினர் அகற்றியதால் பரபரப்பு

முதல்வரை வரவேற்று பேனர் அ.தி.மு.க.,வினர் அகற்றியதால் பரபரப்பு
தமிழக முதல்வர் ஸ்டாலின் கடலுார் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க சென்னையில் இருந்து புதுச்சேரி வழியாக காரில் சென்றார். முதல்வரை வரவேற்று, திண்டிவனம் - புதுச்சேரி பைபாஸ் சாலையில், தி.மு.க., நிர்வாகிகள் சாலையோரங்களில் வரவேற்பு பேனர்கள் வைத்திருந்தனர்.குறிப்பாக, வானுார் ஒன்றிய அ.தி.மு.க.,வினர் எழுதிய முன்னாள் முதல்வர் ஜெ., பிறந்த நாள் சுவர் விளம்பரங்கள் மீது, தி.மு.க.,வினர் விளம்பர பேனர்களை ஒட்டினர்.இதையறிந்த வானுார் ஒன்றிய அ.தி.மு.க., நிர்வாகிகள் நேற்று காலை திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் திரண்டனர்.பின், ஒன்றிய செயலாளர் சதீஷ்குமார் தலைமையில், புள்ளிச்சப்பள்ளம், ராவுத்தன்குப்பம், துருவை, இரும்பை உள்ளிட்ட இடங்களில் அ.தி.மு.க., சுவர் விளம்பரங்கள் மீது ஒட்டப்பட்டிருந்த முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு பேனரை அகற்றினர்.இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
Next Story